Star19. தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்"
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது!
அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அனைவரும் எழுந்து நின்று கௌரவித்தது நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் ஜெமினி பிறமொழித் திரைப்படங்களில் அதிகம் நடித்திராதவர். பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளரும் கூட.
தமிழ் சினிமாவின் பொற்காலத்தில், எம்ஜியார் சிவாஜிக்கு அடுத்து மூன்றாவது பெரிய நடிகராக வலம் வந்த ஜெமினி, எம்ஜியார் சிவாஜியைப் போல 'நாடக மேடை' வாயிலாக சினிமாவுக்கு வந்தவர் அல்லர். அதனால், நாடக நடிப்பின் பாதிப்பு அவரிடம் காணப்படவில்லை. பொதுவாக, ஜெமினி மென்மையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால், திரைப்பட வட்டாரத்தில் அவருக்கு "சாம்பார்" என்ற செல்லப்பெயர் நிலவியது :)

மெல்லிய காதல், இழையோடும் சோகம், பாசம், நுட்பமான நகைச்சுவை / வில்லத்தனம், முதிர்ச்சியின் மிடுக்கு, சரித்திர வீரம் என்று உணர்வுகளை வெளிக்கொணர்ந்த பலவகை கதாபாத்திரங்களில், மிகை நடிப்பு துளியும் இன்றி பரிமளித்தவர் நமது காதல் மன்னன்! ஜெமினி 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் மிக சிறப்பானவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன், 'நாஸ்டால்ஜிக்' பயணம் மேற்கொள்ள விரும்பும் வாசகர்களுக்காக :)
1. மனம் போல் மாங்கல்யம் (1953, கதாநாயகனாக முதல் படம்)
2. கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
3. மிஸ்ஸியம்மா (1955)
4. மாதர் குல மாணிக்கம் (1956)
5. மாயா பஜார் (1957)
6. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
7. கல்யாணப் பரிசு (1959)
8. களத்தூர் கண்ணம்மா (1960)
9. தேன் நிலவு (1961, "பாட்டுப் பாடவா?" வை மறக்கத் தான் முடியுமா?)
10. கொஞ்சும் சலங்கை (1962)
11. சுமை தாங்கி (1962)
12. கற்பகம் (1963)
13. பணமா பாசமா (1968)
14. இரு கோடுகள் (1969)
15. பூவா தலையா (1969)
16. நான் அவனில்லை (1974)
ராமசாமி கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட ஜெமினி, 1940-களில் ஜெமினி ஸ்டூடியோவில் ஒரு 'கதாபாத்திர தேர்வாளராக'த் (casting assistant) தான் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 1947-இல் வெளிவந்த மிஸ்.மாலினி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம், பின் 'சக்ரதாரி'யில் கிருஷ்ணர் வேடம் என்று நடிக்க ஆரம்பித்த R.கணேசன், R.S.மனோகர் கதாநாயகனாக நடித்த 'தாய் உள்ளம்' திரைப்படத்தில் வில்லன் அந்தஸ்து பெற்றார்.
1953-இல் ஜெமினி (தனது 33வது வயதில்!) கதாநாயகனாக நடித்த 'மனம் போல் மாங்கல்யம்' தான் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது! இப்படத்தை என் பள்ளிப்பருவத்தில், லஸ் கார்னரில் உள்ள காமதேனு தியேட்டரில் ரசித்துப் பார்த்தது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது! ஜெமினி இரு வேடங்களில் (இதில் ஒன்று பைத்தியக்காரனாக!) ஒரு கலக்கு கலக்கியிருப்பார்! அருமையான ஒரு நகைச்சுவை படம்!
தெலுங்கிலிருந்து கடன் வாங்கப்பட்ட கதைக்கரு (வெம்பட்டி சதாசிவபிரம்மம்), இரண்டு கதாநாயகிகள், பாலசரஸ்வதியும், சாவித்திரியும். இப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 1953-இல் ஒரு "காதல் மன்னன்" பிறந்தார்! வில்லன்களுடன் அடிக்கடி மல்லு கட்டாத, பக்கம் பக்கமாக வசனம் பேசாத ஒரு மாறுதலான நடிகர் நமக்குக் கிடைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெமினி பல திரைப்படங்களில் காதல் முக்கோணத்தில் சிக்கித் தவிப்பராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது. நிஜ வாழ்விலும் அடிக்கடி காதல் வயப்பட்டதால், ஜெமினி நான்கு திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார்!
நடிகர் கமலஹாசன் 'ஜெமினி மாமா' மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தவர். ஜெமினிக்கும் அதே போலத் தான். ஜெமினியின் 'களத்தூர் கண்ணம்மா' தான் கமலை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அது தவிர, 'உன்னால் முடியும் தம்பி' (ஜெமினி கமலின் தந்தையாக) மற்றும் அவ்வை சண்முகி (ஜெமினி கமலின் மாமனாராக) திரைப்படங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்து அசத்தியிருப்பார்கள்!
ஜெமினி கணேசன் நல்ல நடிகர் மட்டுமல்ல, நிறைந்த வாசிப்பனுபவமும், பேச்சுத்திறனும், விஷய ஞானமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர். கிரிக்கெட், பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்களில் நல்ல தேர்ச்சி பெற்றவர், ஓரளவு நல்ல கர்னாடகப் பாடகரும் கூட! எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரிடமும் தன்மையாக பழகக் கூடியவர், நல்ல பண்பாளர். காதல் மன்னன் மறைந்து விட்டாலும், அவரது திரைப்படங்கள் அவரை நம் நினைவிலிருந்து என்றும் அகல விடாமல் வைத்திருக்கத் தக்கவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
என்றென்றும் அன்புடன்
பாலா

8 மறுமொழிகள்:
your star week posts were really interesting and it shows your writing skills . excellent writings
hats of you.
carry on ..
Arun,
Thanks for your appreciation !
காதல் மன்னன் காதல் மன்னன் தான் :)
காதல் மன்னன் காதல் மன்னன் தான் :)
//1953-இல் ஜெமினி (தனது 33வது வயதில்!) கதாநாயகனாக நடித்த 'மனம் போல் மாங்கல்யம்' தான் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது! இப்படத்தை என் பள்ளிப்பருவத்தில், லஸ் கார்னரில் உள்ள காமதேனு தியேட்டரில் ரசித்துப் பார்த்தது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது! ஜெமினி இரு வேடங்களில் (இதில் ஒன்று பைத்தியக்காரனாக!) ஒரு கலக்கு கலக்கியிருப்பார்!//
1953 இல் பள்ளியிலா ,அப்போ நீங்க சூப்பர் சீனியர் ஆச்சே! :-))
வவ்வால்,
என்ன குசும்பா ? :)
நான் அந்த படம் காமதேனு அரங்கில் re-release ஆனபோது பார்த்தேன் ! about 1978 !!!
என்ன, நட்சத்திர வாரம் ஓக்கேவா ?
எ.அ.பாலா
////பொதுவாக, ஜெமினி மென்மையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால், திரைப்பட வட்டாரத்தில் அவருக்கு "சாம்பார்" என்ற செல்லப்பெயர் நிலவியது :) ///
இல்லை. ஏதோ ஒரு படத்தில் சாம்பார் பிரியராக கலக்கியிருப்பார். சாம்பார் சாம்பார் என்று கேட்டு சாப்பிடுவார். அதுவே காரணப்பெயராக மாறியது. (பக்கோடா காதர் மாதிரி !!).
நடிகர் சிவக்குமார் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் (இது ராஜ பாட்டை அல்ல, அலயன்ஸ் பதிப்பகம்) ஜெமினி அவர்களைப் பற்றிய அருமையான் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
(முப்பது வயது ஆகியும் திருமணம் தாமதப்பட்ட நண்பர்கள் மூவர் அடிக்கடி கரூரில் சந்திப்போம். அப்போ நாலாவுது திருமணம் செய்த ஜெமினிய பார்த்து : 'பார்யையா, 78 வயசுல நாலாவது கல்யாணம் செய்ராப்பல ; நமக்கு இங்க 32 ஆகியும் 'முதலுக்கே' வழியக்காணம்னு புலம்பிய நண்பன மறக்க முடியாது.. :)))
ஆயினும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்காமல் வாழ்பவர்களின் வாழ்வு துன்பம் நிறைந்த்து ; நிம்மதி இழந்துமே வாழ வேண்டியிருக்கும். (கண்னதாசன் மற்றோர் உதாரணம்)
அதியமான்,
நன்றி.
I am glad that this made you remember good old things :)
Post a Comment